இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதியது; வாலிபர் பலி

இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதியது; வாலிபர் பலி

Update: 2022-09-19 18:45 GMT

சிங்கம்புணரி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிச்சங்காளபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராவணன் (வயது 22). இவர் தன் தந்தை இறந்த பிறகு, தனது தாயாரின் ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிபட்டியில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மருதிபட்டியில் இருந்து சிங்கம்புணரி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அ.காளாப்பூர் அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தில் எதிர்பாராதமாக இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு ராவணன் படுகாயம் அடைந்தார். அவரை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து எஸ்.வி. மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்