பாலாற்றின் குறுக்கே மண்சாலையில் சிக்கிய லாரி

பாலாற்றின் குறுக்கே மண்சாலையில் சிக்கிய லாரியால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2023-06-07 12:06 GMT

பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே அகரம் சேரி ஊராட்சி சார்பாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு சுமார் ரூ.3 லட்சம் செலவில் மண் சாலை அமைத்தனர். இந்த மண் சாலையில் கனரக வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் சென்று வந்ததால் பொதுமக்கள் குடியாத்தம் சென்று வருவதற்கு வசதியாக இருந்தது.

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மண் சாலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வழியாக கார், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் சென்ற பொதுமக்கள் வழி இல்லாததால் மாதனூரை சுற்றிக்கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்