சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

ஒட்டன்சத்திரம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-08-05 16:15 GMT

திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலுக்கு அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை, திண்டுக்கல்லை சேர்ந்த செல்வபாண்டி (வயது 33) என்பவர் ஓட்டினார்.

லெக்கையன்கோட்டை-அரசப்பபிள்ளைபட்டி நான்கு வழி புறவழிச்சாலையில் நாகனம்பட்டி பிரிவு அருகே நேற்று அதிகாலை லாரி வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் செல்வபாண்டி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்