காய்கறி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

நாகர்கோவிலில் காய்கறி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

Update: 2023-05-25 20:14 GMT

நாகர்கோவில், 

நாங்குநேரியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி ஒரு லாரி புறப்பட்டது. அந்த லாரி அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி செல்லும் 4 வழிச்சாலையில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் டிரைவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து லாரியை மீட்கும் பணி நடந்தது. ராட்சத எந்திரம் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. புத்தேரி 4 வழிச்சாலை இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்