சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பணகுடியில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

Update: 2023-02-03 19:38 GMT

பணகுடி:

தூத்துக்குடியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பணகுடி வழியாக டாரஸ் லாரி ஒன்று சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை களியக்காவிளையைச் சேர்ந்த சுகைப் என்பவர் ஓட்டினார். பணகுடி நான்கு வழிச்சாலை துணை மின் நிலையத்துக்கு தெற்கு புறம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், டிரைவரும், கிளீனரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். கவிழ்ந்த லாரி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்