சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-06-11 19:15 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது.

இதன் காரணமாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் கிணத்துக்கடவில் இருந்து கோதவாடி செல்லும் வழியில் உள்ள காந்தி பண்ணையில் நின்றிருந்த கொன்றை மரம் முறிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனாலும் மரத்தின் கிளை ரோட்டில் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிளையை சாலையோரம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை வாகன ஓட்டிகளே சீர்படுத்தினர். எனினும் மரம் முழுமையாக அகற்றப்படாததால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்