சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது

வள்ளியூரில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது

Update: 2022-10-11 22:04 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையோரத்தில் உள்ள 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேப்பமரம் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போக்குவரத்தை மாற்றி விட்டனர். தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. 

Tags:    

மேலும் செய்திகள்