அரசு பஸ் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

கருங்கலில் அரசு பஸ் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2023-05-15 21:28 GMT

கருங்கல்:

கருங்கலில் அரசு பஸ் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

முறிந்து விழுந்த மரக்கிளை

கருங்கலில் பஸ் நிலையத்திற்கு மிக அருகில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு ஒரு பழமையான வேப்ப மரம் உள்ளது. நேற்று மாலையில் பேரூராட்சி ஊழியர்கள் வேலை முடிந்த பின்பு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் இரவு 8 மணிளவில் திடீரென வேப்ப மரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சின் மீது கிளையின் ஒரு பகுதி விழுந்தது. இதில் பஸ்சின் பக்க கண்ணாடி உடைந்தது.

மேலும், சாலையின் ஓரமாக நின்ற தொலைபேசி கம்பம், சாலையில் நிறுத்தி இருந்த கார் ஆகியவை மீது கிளை சாய்ந்து விழுந்தது. இதில் தொலைபேசி கம்பம் சாய்ந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பரபரப்பு

மரக்கிளை முறிந்த விழுந்த பகுதி பகலில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இந்த இடத்தில்தால் நிறுத்தி இருப்பார்கள். அலுவலகம் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்