திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றியால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-06 19:07 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் உள்ள வங்கி அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே இதுபற்றி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்