புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது
குறிஞ்சிப்பாடியில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது குறிஞ்சிப்பாடி- புவனகிரி சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் நடத்திய சோதனையில் 540 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை வியாபாரியான கோவிந்தன்(வயது 52) கைது செய்யப்பட்டார்.