புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்தது
புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிராக்டா் கவிழ்ந்தது
கரூர் மாவட்டம் புகழூர் செம்படாபாளையம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி செல்வதற்காக கரூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் பதிவு செய்து வெட்டும் தருவாயில் உள்ள கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் கூலி ஆட்கள் மூலம் கரும்புகளை வெட்டி எடுத்து டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் சர்க்கரை ஆலைக்கு இரவு பகலாக கொண்டு வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சுமார் 100 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிப்பர் மூலம் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும்போது வாகனத்தை தளவாபாளையம் பிரிவு சாலையில்திருப்பும் பொழுது திடீரென எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி டிராக்டர் வாகனம் கரும்பு டிப்பருடன் தார் சாலையில் கவிழந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் டிராக்டர் டிப்பரில் இருந்த கரும்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் எனகொட்டியது.இதனால் அப்பகுதியில் தார் சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக ெபாக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தார் சாலையில் கொட்டி மலைபோல் குவிந்து கிடந்த கரும்பு குவியல்களை சிறிது சிறிதாக தார் சாலையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.