டயர் வெடித்து சுற்றுலா வேன் கவிழ்ந்தது
காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்து சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் மணி (வயது 67). இவர் தனது உறவினர்கள் 22 பேருடன் ஆரணி நோக்கி சுறறுலா வேனில் சென்றார். காவேரிப்பாக்கம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று வேனின் பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த மணி (67), சங்கரலிங்கம் (52), மங்கையர்கரசி (50), ரமேஷ் (46), ராதிகா (34), சாய் ஹரிஷ் (7) ஆகிய 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்க காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.