ஓடும் காரில் பயங்கர தீ
ஈச்சனாரி மேம்பாலம் அருகே ஓடும் கொழுந்து விட்டு எரிய தொடங்கி யது. 4 பேர் உயிர் தப்பினர்
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனது உறவினர்கள் 3 ேபருடன் ஒரு காரில் நேற்று காலை ஆனைமலையில் இருந்து கோவை நோக்கி கோவை- பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென்று புகை வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாலையோரத்தில் காரை நிறுத்தினார். உடனே காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அதன் பிறகு சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிய தொடங்கி யது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இது குறித்த தகவலின் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
தீப்பற்ற தொடங்கியதும் காரில் இருந்த அனைவரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.