மக்கள் மன்றத்தில் பயங்கர தீ விபத்து

மக்கள் மன்றத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-01-23 20:03 GMT

திருச்சி தில்லை நகர் 5-வது கிராசில் மக்கள் மன்றத்தில் பண்டிகை காலங்களில் துணிக்கடைகள் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு ரபீக், அஜ்மல், ஜெயக்குமார் ஆகியோர் துணிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இங்குள்ள துணிக்கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ேமலும் அங்குள்ள துணிகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைகண்ட அப்பகுதியினர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அனுசியா தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனத்தில் விரைந்து சென்று தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்