புதருக்குள் கிடந்த கோவில் உண்டியல்
திருவட்டார் அருகே புதருக்குள் கிடந்த கோவில் உண்டியல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே புதருக்குள் கிடந்த கோவில் உண்டியல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் உண்டியல்
திருவட்டார் அருகே அருவிக்கரை வலது கரை கால்வாய் கரையோரம் புளி மூட்டுக்கரை பகுதி புதரில் நேற்று காலையில் கோவில் உண்டியல் ஒன்று அனாதையாக கிடந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து உண்டியலை புரட்டி பார்த்த போது அதில் பணம் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது.
போலீஸ் விசாரணை
கடந்த வாரம் தக்கலை அருகே கல்லுவிளை, பூந்தோப்பு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆம்ளிபயர் மற்றும் கோவில் உண்டியல் பணம் கொள்ளை போனது தொடர்பாக திருவட்டார் கிழங்கு விளையை சேர்ந்த செல்வராஜ் (வயது 54), தச்சக்குடி விளையை சேர்ந்த ஜெயக்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது உண்டியல் கிடைத்துள்ளதால் அவர்கள் கோவிலில் இருந்து உண்டியலை திருடி பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை போட்டு சென்றனரா?, அது எந்த கோவிலுக்கு சொந்தமான உண்டியல் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.