மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்
உளுந்தூர்பேட்டை ரெயில்வே குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பன்வரிலால் மீனா(வயது 32). ரெயில்வே ஊழியரான இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
பின்னர் நள்ளிரவில் சத்தம் கேட்டு படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்த பன்வரிலால் மீனா வீ்ட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை திருடிச்செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை மடக்கி பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் பச்சையப்பன்(வயது 22) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.