கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது

கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-02 12:52 GMT

கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்பாடி பஸ்நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் எலந்தோப்பு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மணிக்குமார் (வயது 29) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் இருந்து கஞ்சா வாங்கி ரெயிலில் காட்பாடிக்கு கடத்தி வந்ததும், இங்கிருந்து பஸ்சில் மயிலாடுதுறைக்கு கடத்தி செல்வதற்காக காட்பாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மணிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்