தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி

குடியாத்தத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

Update: 2023-07-16 18:42 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லத்தேரி- காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கே.வி.குப்பத்தை அடுத்த மேலதெரு காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த ருத்ரவேல் என்பவரின் மகன் கோகுல் (வயது 23) என்பதும், தனியார் பல்கலைக்கழகத்தில் மிஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்