திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில்வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் :பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் அய்யனார் (வயது 42). இவர் நேற்று மதியம் தனது வீட்டை பூட்டிவிட்டு, அதேபகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று அவர் பார்க்கையில், அங்கு பீரோ கதவை ஒருவர் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.அய்யானர் திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அய்யனார வீட்டுக்குள் இருந்த அந்த நபரை மடக்கி பிடித்து, திருப்பாலபந்தல் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் உளுந்தூர்பேட்டை தாலுகா நத்தாமூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஆனந்தன் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.