வியாபாரியை மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை அருகே வியாபாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்து, அன்னைவேளாங்கண்ணி தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 44). இவர் காய்கறி வியாபாரம் செய்து கொண்டு ஆட்டுக்குட்டிகள் வளர்த்து வருகிறார். பெருமாளின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இடத்தில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (27) என்பவர் இருந்ததாகவும், அவரிடம் சென்று ஆடு காணாமல் போனது சம்பந்தமாகவும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர், பெருமாளை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெருமாள் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவசங்கரை நேற்று கைது செய்தார்.