கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

கடையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-10-11 00:03 GMT

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு மடிகாரர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் வீரப்பம்பாளையம் பகுதியில் சலவை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4-ந் தேதி இரவில் சரவணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் அவர் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. மேலும், கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டுபோய் இருந்தது.

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி, ஈரோடு சூரம்பட்டிவலசு கோவலன் வீதியை சோ்ந்த மணிகண்டன் (29) என்பவரை கைது செய்தனர். கைதான மணிகண்டன் மீது அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்