லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கம்பத்தில், கம்பம்மெட்டு சாலையில் உள்ள ஜீப் ஸ்டாண்டு பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியம்மாள் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து 1,617 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த பாரதிராஜா (வயது 28) என்பதும், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.