லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

Update: 2023-02-22 18:45 GMT

நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது35) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து யூசுப்பை கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்