கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

போடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-04 18:45 GMT

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி பார்க் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 250 கிராம் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடி கீழ்த்தெருவை சேர்ந்த கவுதம் (வயது 23) என்பதும், லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவுதமை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்