சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

Update: 2023-07-31 19:30 GMT

சிறுமியை சீரழித்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் பலாத்காரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செலசனாம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 29). இவர் காவேரிப்பட்டணம் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

மேலும் திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த 21.9.2021 அன்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், போக்சோ பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனைகளை பிரபு ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்