கிணற்றுக்குள் குதித்த வாலிபர் சாவு

நீச்சல் கற்று கொள்ளப் போவதாக கூறி கிணற்றுக்குள் குதித்த வாலிபர் சாவு திருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம்

Update: 2023-06-06 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திர பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் விஜயகுமார் (வயது 20). இவர் நேற்று மதியம், அந்த பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் நீச்சல் கற்றுக்கொள்ள போவதாக, அந்த பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் கூறி சென்றுள்ளார். தொடர்ந்து கிணற்றுக்குள் குதித்த அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் மூழ்கிய விஜயகுமாரை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்