1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-26 22:45 GMT

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில், சித்தையன் கோட்டை பிரிவு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சித்தையன்கோட்டை பிரிவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சேடப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு வீட்டில் 23 மூட்டைகளில், 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் இருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சித்தையன் கோட்டையை அடுத்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த நாகூர்கனி (வயது32) என்பதும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அரவை மில்லில் மாவு அரைக்க விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் யாரிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்குகிறார். எப்படி விற்பனை செய்கிறார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்