வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் பலி
வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலுக்குள் விழுந்த வாலிபர் பலியானார்.
வாய்க்காலில் வாலிபர் பிணம்
தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் உள்ள நம்பர்-1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, வாய்க்காலில் பிணமாக கிடந்தவர் தஞ்சை மாவட்டம் நெய்வாசல் தெற்குதெருவை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரின் மகன் பிரதீப் (வயது27) என்பதும், இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இறந்தது எப்படி?
மேலும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த துக்கத்திற்கு வந்த பிரதீப் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் நெய்வாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர்-1 வாய்க்காலில் விழுந்துள்ளார் என்பதும், இரவு நேரம் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்தது காயம் அடைந்தது யாருக்கும் தெரியாமல் போனதால் இறந்துபோனதும் விசாரணையில் தெரியவந்தது.