கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
பெரணமல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஜே.ஜே.நகர் டி.டி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 29), செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தில் உறவினர் இறந்ததை தொடர்ந்து காரிய நிகழ்ச்சிக்காக ஜெகநாதன் மகாதேவி மங்கலத்துக்கு வந்தார். பின்னர் அவர் மதுஅருந்திவிட்டு நிலத்தின் வழியாக வரும் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரணமலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்து ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.