மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கியபடி நடனமாடிய வாலிபர்

ஜோலார்பேட்டை அருகே மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கியபடி வாலிபர் நடனமாடினார்.

Update: 2023-06-03 11:21 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வரதகவுண்டர் வட்டம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை, அபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அங்குள்ள கொப்பரையில் ஊற்றினர்.

இதையொட்டி ஊர்வலம் செல்லும் போது மின்சாரத்தின் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன் கூட்டியே மின்வாரிய துறையினருக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

இந்த நிலையில் அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசனின் சகோதரர் பாரதிதாசன் என்ற வாலிபர் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதை அறிந்ததும் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறி தலைக்கீழாக தொங்கியபடி நடனமாடி சாகசம் செய்தார்.

அப்போது திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்