வேறு ஒருவருடன் சென்ற மனைவியை துரத்திச்சென்று வெட்டிய வாலிபர்
ஜோலார்பேட்டை அருகே தனது மனைவி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்த கணவர், சிமா பாணியில் துரத்திச்சென்று கள்ளக்காதலனை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேறு ஒருவருடன் சென்ற மனைவி
திருப்பத்தூர் அருகே உள்ள இருணாப்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே உள்ள கட்டேரி பகுதிக்கு தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்றார்.
அப்போது காதல் திருமணம் செய்து கொண்ட தனது மனைவி கட்டேரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் தேங்காய் உரிக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.
கள்ளக்காதலனுக்கு வெட்டு
நாட்டறம்பள்ளி- திருப்பத்தூர் சாலையில் தாமலேரிமுத்தூர் பகுதியில் அவர்களை மடக்கினார். உடனே அவரது மனைவியை மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவருடன் அந்த வாலிபரும் தப்பி ஓடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால், மனைவியுடன் ஓடிய வாலிபர் முதுகு பகுதியில் தாக்கினர். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அந்த வாலிபர் ஓடினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் தாக்கிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். படுகாயம் அடைந்தவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை ெபற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.