மந்தாரக்குப்பத்தில் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது

மந்தாரக்குப்பத்தில் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-26 18:45 GMT

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற வந்தியதேவன்(வயது 22). இவர் தனது பிறந்தநாளையொட்டி கடந்த 24-ந்தேதி நண்பர்களுடன், மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏன் இவ்வாறு நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது வந்தியதேவன், நாங்கள் ரவுடி என்று கூறியதுடன், கத்தியை காட்டி போலீசாரை மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தியதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்