ஆத்தூர் அருகே வீடு புகுந்து 18 பவுன் நகை திருடிய வாலிபர் கைது திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது சிக்கினார்

ஆத்தூர் அருகே வீடு புகுந்து 18 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-02 20:34 GMT

ஆத்தூர், 

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலியன் (வயது 65), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 18 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதே போல துறையூரை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மோட்டார் சைக்கிள் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் நிறுத்தி இருந்தபோது திருட்டு போனது. இந்த புகார்கள் குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தார். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வினோத்குமாரின் திருட்டு போன மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமம் கல் ஒட்டர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வெங்கடேஷ் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கலியன் வீட்டில் 18 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 18 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்