வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது

மேல்விஷாரத்தில் வீடுபுகுந்து திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.

Update: 2023-07-20 18:35 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை திறந்துகொண்டு உள்ள வந்த ஒரு வாலிபர், ஆங்கரில் மாட்டி வைத்திருந்த சட்டை பாக்கெட்டில் இருந்த 1,000 ரூபாயை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

அவரை கையும், களவுமாக பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அப்துல் ரைஸ் (வயது 19) என்பது தெரிய வந்தது. இவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்