டிக்கெட் கேட்ட கண்டக்டர் பல்லை உடைத்த வாலிபர் கைது

டிக்கெட் கேட்ட கண்டக்டர் பல்லை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-20 18:51 GMT

காரைக்குடி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அறந்தாங்கி கிளையை சேர்ந்த பஸ் மதுரையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்றது. அதில் கண்டக்டராக கீழாநிலைகோட்டையைச் சேர்ந்த படிக்காசு (வயது 51) என்பவர் பணியில் இருந்தார். காரைக்குடியில் பஸ்சில் ஏறிய ஒரு நபர் டிக்கெட் எடுக்காமலேயே வந்து கொண்டிருந்தார். கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு பலமுறை கூறியும் இதோ எடுக்கிறேன் என்று கூறி காலதாமதம் செய்து கொண்டே இருந்தார் கோட்டையூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்ற போது அந்த நபர் டிக்கெட் எடுக்காமலேயே இறங்கிச் சென்றார். உடனே கண்டக்டர் பஸ்சை விட்டு இறங்கிச் சென்று அவரை வழிமறித்து டிக்கெட் எடுங்கள் என்று கூற அந்த நபரோ கண்டக்டரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதனால் கண்டக்டரின் ஒரு பல் உடைந்ததோடு அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தரையில் கிடந்த கல்லில் அவரது தலை பட்டு காயம் ஏற்பட்டது.. கண்டக்டரை தாக்கிய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலங்குடியை சேர்ந்த பூமிராஜா (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்