மது போதையில் பொக்லைன் உரிைமயாளர் காதை கடித்து துண்டாக்கிய வாலிபர்
மது போதையில் பொக்லைன் உரிைமயாளர் காதை கடித்து வாலிபர் துண்டாக்கினார்.
வடகாடு, மே.31-
வடகாடு மேல இடையர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 30). பொக்லைன் உரிமையாளர். இவர் நேற்று தனது காரை வடகாடு பரமன்நகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரது தோட்டத்திற்கு செல்லும் வழியில் நிறுத்தி விட்டு காருக்குள் இருந்து செல்போனில் பேசி கொண்டு இருந்துள்ளார். அப்போது மது போதையில் அங்கு வந்த ராம்குமார், மோகன்ராஜிடம் யாருடா நீ இங்கு காரை நிறுத்தி இருக்கிறாய் என்று கூறி காரை உதைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்குமார், மோகன்ராஜின் காதை கடித்ததில், அவரது காது துண்டானது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.