போலீஸ்காரரை கடித்து விட்டு தலைமறைவான வாலிபர் கைது

போலீஸ்காரரை கடித்து விட்டு தலைமறைவான வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-17 21:17 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில், கடந்த மாதம் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளதும், அவர்கள் பலஸ்தீனாபுரத்தைச் சேர்ந்த வல்லாளன் மகன் முத்துக்குமார் (வயது 25), அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் உத்தமராசா (27) மற்றும் சிவன் மகன் சுப்பையா (48) என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள், போலீசாரை அவதூறாக பேசியதோடு, கீழே கிடந்த கற்களை எடுத்துக்காட்டி கொலை மிரட்டலும் விடுத்து விட்டு ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்த போலீஸ்காரர் முருகேசனை கையில் கடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் முத்துக்குமாரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்