விவசாயியை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

விவசாயியை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-08-29 19:24 GMT

அடித்துக்கொலை

பெரம்பலூரை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் சிங்காரவேல்(வயது 67). அதே ஊரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (35). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். மேலும் இவர்களது குடும்பத்தினருக்கு இடையே நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் பிரச்சினை இருந்துவந்தது.இந்தநிலையில் கடந்த 7.1.2019 அன்று சிங்காரவேல், பாக்கியராஜ் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது வீட்டுக்கு முன்பு சிங்காரவேல் நின்று கொண்டிருந்தபோது, பாக்கியராஜ் அவரை கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிங்காரவேல், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து சிங்காரவேலின் மகன் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாக்கியராஜை கைது செய்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், பாக்கியராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து பாக்கியராஜ் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்