தேவகோட்டை அருகே வாலிபர் குத்திக் கொலை - போலீசார் விசாரணை

தேவகோட்டை அருகே புதிய கோவில் கட்டுவதற்காக நடந்த ஊர் கூட்டத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-19 05:54 GMT

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமம். இந்த ஊர் மக்களுக்கு அழகர் கோவிலில் உள்ள அழகர் குலதெய்வம் ஆகும்.

ஊரிலேயே புதிதாக அழகர் கோவில் கட்டுவதற்காக நேற்று ஊர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்பு பெரியசாமி மகன் ராஜேஷ்(வயது21) என்பவருக்கும் உறவினர் மெய்யர் என்பவருக்கு விளையாட்டுத்தனமாக ஏற்பட்ட வாய்ப்பேச்சு சண்டையாக மாறி உள்ளது.

அப்போது, ஆத்திரம் அடைந்த மெய்யர் தான் வைத்திருந்த கத்தியால் ராஜேசின் கழுத்துப்பகுதியில் குத்தியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லல் போலீசார் விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி மெய்யரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்