மதுரை,
மதுரை அழகர்கோவில் ரோடு, கள்ளந்திரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). சம்பவத்தன்று இவர் கூடல்நகர் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தண்ணீர் லாரி நின்றதால் அதன்பின்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த மற்றொரு லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.