லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-07-06 20:40 GMT

காரியாபட்டி, 

கமுதி அருகே உள்ள மேல முடிமண்ணார் கோட்டையை சேர்ந்தவர் மலைமேகு (வயது 33). இவர் க.விலக்கில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு சாயல்குடி அருப்புக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மலைமேகு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மலைமேகுவை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இ்ந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மலைமேகு இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்