காயத்துடன் வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

காயத்துடன் வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

Update: 2023-05-25 21:10 GMT


மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 39). சம்பவத்தன்று இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து முனியசாமியின் தந்தை பூபதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்தார்களா, அவரது கழுத்தில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்