போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றாா்.

Update: 2022-08-24 19:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சங்கரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கொப்பையாராஜ் (வயது27). இவர் கடந்த 2021-ம் ஆண்டு சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த லட்சம் என்பவரிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதற்காகவும், தனக்குள்ள இடப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்காகவும் ரூ.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை கிடைக்காதநிலையிலும், இடப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படாத நிலையிலும் லட்சத்திடமிருந்து பணத்தை திரும்ப பெற முடியாத கொப்பையா ராஜ் கடந்த 12-ந் தேதி நடவடிக்கை கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் நேற்று கொப்பையா ராஜ் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த கொப்பையாராஜ் தன் மீது மண் எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஏற்கனவே தான் விஷம் குடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்