கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-28 18:45 GMT

விழுப்புரம்:

விக்கிரவாண்டி தாலுகா டி.புதுப்பாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர், திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொள்ள முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று சரவணனை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. சிலர், பொது குடிநீர் குழாயில் இருந்து மின் மோட்டார் மூலம் முறைகேடாக குடிநீர் எடுத்து வருகின்றனர். இதையும் தடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதேநேரத்தில் முறைகேடாக குடிநீர் எடுக்கும் நபர்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்