மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து சாவு

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2022-12-24 19:04 GMT

வேலைக்கு சென்றார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனைமுத்து. இவரது மகன் ஆனந்த்(வயது 30). இவர் தனியார் சிமெண்டு செங்கல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து வேலைக்காக சிமெண்டு செங்கல் தொழிற்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரம்பலூர்- அரியலூர் சாலையில் குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலைக்கு முன்பு மோட்டார் சைக்களில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டது.

சாவு

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஆனந்திற்கு அகிலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்