மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

சிவகாசியில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார்.

Update: 2023-05-14 20:20 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சகாயராஜ் ஜீவன். இவர் நாரணாபுரம்-கன்னிச்சேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெத்துலுப்பட்டி விலக்கில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்