குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலி

ராஜபாளையத்தில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலியானார்.

Update: 2023-01-02 19:50 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலியானார்.

ஜவுளிக்கடை ஊழியர்

ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்இருளப்பன் (வயது 30). இவர் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். இவர் நகர் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் டி.பி. மில்ஸ் சாலையில் இரவில் சென்றார்.

இந்தநிலையில் சாலையின் நடுவே தாமிரபரணி குடிநீர் குழாயில் இருந்த கசிவை சரி செய்வதற்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அப்போது அவர் அந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளுடன் விழுந்தார்.

பள்ளத்தில் விழுந்து சாவு

இரவு நேரத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இவர் விழுந்தது வெளியே தெரியவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இவரை உறவினர்கள் தேடிய போது பள்ளத்தில் பொன் இருளப்பன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார், பொன் இருளப்பன் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்