செஞ்சி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

செஞ்சி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-08-31 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள கல்லாலிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்தோஷ் (வயது 23). கூலி தொழிலாளி. இவரும் அதே ஊரை சேர்ந்த தனசேகர் (36) என்பவரும் ஒரு டிராக்டரில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வருவதற்காக நாட்டார்மங்கலம் நோக்கி புறப்பட்டனர். டிராக்டரை தனசேகர் ஓட்டினார். சந்தோஷ் டிராக்டர் டிப்பரில் அமர்ந்து பயணம் செய்தார். செஞ்சி அடுத்த திருவம்பட்டு காளி கோவில் அருகே சென்றபோது, சந்தோஷ் டிராக்டர் டிப்பரிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்