மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-12-21 18:40 GMT

கரூர் மாவட்டம், புகழூர் செம்படபாளையம் செந்தூர் நகர் 4-வது கிராஸ் பகுதி சேர்ந்தவர் கோபால்(வயது 53). இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ஜவகர் (25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சம்பவத்தன்று வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8 மணி அளவில் உயிரிழந்தார். இதுகுறித்து ஜவகரின் தந்தைகோபால் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்து வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்