தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-12 18:45 GMT

விக்கிரவாண்டி, 

மயிலம் அருகே உள்ள கணபதிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சஞ்சய்(வயது 32). இவர் ரெட்டிக்குப்பத்தில் இருந்து கணபதிப்பட்டு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். அவர் அதில் குளித்தபோது மூச்சுச்திணறி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்